25 கோடி கடன் தருவதாக கூறி வியாபாரியிடம் 30 லட்சம் மோசடி

மதுரை: நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் வரதராஜன் (63). பலசரக்கு கடை நடத்தி வருகிறார். தொழில் விரிவாக்கத்திற்காக இவரிடம், நண்பர் மூலம் அறிமுகமான மதுரையை சேர்ந்த அருந்ததி, ஹரி, கவுதம் ஆகியோர் தொடர்பு கொண்டு, 25 கோடி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடன் தருவதாக ஒப்புக்கொண்ட மூவரும் டாக்குமென்ட் செலவிற்காக 30 லட்சம் வேண்டும் என கேட்டுள்ளனர்.இதையடுத்து நேற்று முன்தினம் ரூ.30 லட்சத்துடன் வரதராஜன் மதுரை வந்தார். தல்லாகுளத்தில் வைத்து ரூ.30 லட்சத்தை மூவரிடம் கொடுத்துள்ளார். முதல் தவணையாக 1 கோடியே 40 லட்சம் கொடுப்பதாக கூறி மூவரும் சேர்ந்து ஒரு சூட்கேஸை வரதராஜனிடம் கொடுத்தனர்.

மூவரும் சென்ற பின், வரதராஜன் பணத்தை சரிபார்த்தபோது 28 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. சூட்கேஸில் ரூபாய் நோட்டுக்கு அடியில், ரூபாய் நோட்டு அளவிற்கு வெள்ளை பேப்பர், போலி 2 ஆயிரம் ரூபாய் கலர் பேப்பர் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏமாற்றப்பட்டதை அறிந்த வரதராஜன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: