திருப்பதி அருகே 15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்

திருமலை: சித்தூர் மாவட்டம், திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்ஐ வாசு  தலைமையிலான போலீசார் ஸ்ரீவாரிமெட்டு, கல்யாணி அணை பின்புறம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தையாலகோணா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை சென்றபோது, கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சிப்பதை கண்டனர்.

உடனே அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். போலீசாரை கண்ட கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை ஆங்காங்கே வீசிவிட்டு இருட்டில் தப்பியோடிவிட்டனர். போலீசார் விரட்டிச்சென்றதில் 2 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம்,  அணைக்கட்டை சேர்ந்த காமராஜ், சேகர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து அங்கிருந்த 15 லட்சம் மதிப்புள்ள 20 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவர் அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: