வீட்டில் பதுக்கிய 500 கிலோ செம்மரம் பறிமுதல்

தண்டையார்பேட்டை, அக். 20: தண்டையார்பேட்டை  நேதாஜிநகர் 4வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார்  நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில்  செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். ஒரு அடி நீளத்தில் 50 செம்மரக்கட்டைகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 500 கிலோ. தொடர்ந்து போலீசார் விசாரித்தனர்.

அதில், வீட்டின் உரிமையாளர் சாகுல் அமீது (35) என்பவர், செம்மரங்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்தது தெரிந்தது. போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த சாகுல், தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, அவரது மனைவி பர்சத் பானு (30) என்பவரை வீட்டு காவலில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை காவல்நிலையத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர், தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உளள் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரக அதிகாரிகள், காவல் நிலையம் சென்று செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து எங்கிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது, வெளிநாடுகளுக்கு அனுப்புவற்காக பதுக்கி வைக்கப்பட்டதா, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: