நல்ல சக்தியாக இருந்தால் ஓட்டு கிடைக்கும் இல்லாவிட்டால் நடிப்புக்கு திரும்ப வேண்டியதுதான் : கமல் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சென்னை: கமல்ஹாசன் தேர்தலில் நிற்கட்டும். நல்ல சக்தியாக இருந்தால் மக்கள் ஓட்டுபோடுவார்கள், தீய சக்தியென்றால் சினிமாவில் நடிக்கவேண்டியது தான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஆவின் தலைமை அலுவலகத்தில் 5 வகையான இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ், ஆவின் இணைநிர்வாக இயக்குநர் மணிவண்ணன், பொதுமேலாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: ஆவின் பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். எனவே மில்க் கேக், பாதுஷா, ஸ்பெஷல் நட்ஸ்அல்வா, பாதாம் அல்வா, முந்திரிகேக் ஆகிய 5 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கே தெரியாமல் மலேசிய நாட்டில் ஆவின் பொருட்கள் அதிகம் விற்பனை செய்கின்றன. அங்குள்ள ஷாப்பிங் மாலில் கிடைப்பதாக கூறுகிறார்கள். இங்கு இருந்து செல்பவர்கள் கொண்டு செல்கின்றனர்.

ஏற்கனவே, மலேசியாவில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய ஒப்பந்தம் ெசய்யப்பட்டது. அதற்குள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தற்போதும் மலேசியாவில் விற்பனை செய்ய தற்போதைய ஆட்சியாளர்களிடம் அனுமதி கேட்டு உள்ளோம். தற்போது ஹாங்காங், சிங்கப்பூரில் பால் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் ஆவினை நம்பி பால் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு பணப்பட்டுவாடா பாக்கி இல்லாமல் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட 3.50 லட்சம் லிட்டர் ஆவின் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. அதிமுக வலுவான கட்சியாக உள்ளது. மக்களை ஏமாற்றி வெற்றி பெற முடியாது. கமல்ஹாசன் தேர்தலில் நிற்கட்டும். நல்ல சக்திக்கு தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள், தீய சக்திக்கு ஓட்டுப் போடமாட்டார்கள். தீய சக்தியென்றால் சினிமாவில் நடிக்க வேண்டியதுதான்.இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.      

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: