2022-க்குள் நாட்டு மக்கள் யாவருக்கும் வீடு என்பதே லட்சியம் : பிரதமர் பேச்சு

ஷீரடி; சாய்பாபாவின் 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு ஷீரடியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். உலக புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மிக எளிமையாக வாழ்ந்து முக்தி பெற்ற சாய்பாபா 1918ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று ஜீவ சமாதி நிலையை அடைந்தார். இந்நிலையில் அவர் சமாதி அடைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள சாய்பாபா கோயில்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் இன்று ஷீரடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி அங்கு சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் தங்குவதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குப் புதிய வீட்டுக்கான சாவிகளையும் அவர் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பேசிய பிரதமர், தனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 2022-ம் ஆண்டுக்குள் வீடில்லாமல் யாரும் இல்ல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அந்த இலக்கில் பாதியை தற்போது எட்டியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். முந்தைய ஆட்சிக்காலத்தில் 25 லட்சம் வீடுகளே கட்டப்பட்டதாகவும், ஆனால் தமது நான்காண்டு ஆட்சியில் ஒன்றேகால் கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: