நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள்

திருவனந்தபுரம்; சபரிமலைக்கு அனைத்து வயது பெண்பகளும் வரலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுார், கடந்த 2 நாட்களாக சபரிமலையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் சபரிமலை புனித பூமியாகும். அதனை கவலர பூமியாக்க பெண்கள் நினைக்க கூடாது. அப்படி கலவர பூமியாக்கவும் நாங்கள் விட மாட்டோம் என்றார்.

தற்போது சபரிமலையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் மற்ற மாநில பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், சபரிமலை நிகழ்வுகள் குறித்து கேரள உயர்நீதிமன்றத்திலும் அறிக்கையை ஒப்படைப்போம் என்றார். தேவசம் போர்டின் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் விசாரணையின் போது தேவசம் போர்டு இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவிக்கும் என்றார்.  நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: