சபரிமலை விவகாரம் : தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

புதுடெல்லி: சபரிமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில்  போராட்டம் வெடித்தது. கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ் உடையில் ஹெல்மெட் அணிந்து பலத்த எதிர்ப்புக்கு இடையே சன்னிதானத்தை நெருங்கினார்.

அவருடன் இன்னொரு பெண் பக்தரும் சென்றார். சன்னிதானத்தை நெருங்கிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரளா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: