தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதே போல் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராஜபாளையத்தில் 12 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவில்பட்டியில் 5 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் சிவகிரியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: