18-ம் படியில் தந்திரிகள் போராட்டம் : சபரிமலை சன்னிதானம் அருகே சென்ற பெண்கள் 2 பேரும் திரும்பினர்

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் அருகே சென்ற பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரஹானா பாத்திமா ஆகியோர் திரும்பி செல்கின்றனர். சன்னிதானத்துக்கு வெளியே பக்தர்களின் கடும் எதிர்ப்பால் பெண்கள் திரும்பி செல்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில்  போராட்டம் வெடித்தது. கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ் உடையில் ஹெல்மெட் அணிந்து பலத்த எதிர்ப்புக்கு இடையே சன்னிதானத்தை நெருங்கினார். அவருடன் இன்னொரு பெண் பக்தரும் சென்றார். சன்னிதானத்தை நெருங்கிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சபரிமலைக்கு பக்தர்களை தவிர செய்தியாளர், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சன்னிதானம் அருகே சென்ற பெண்கள் இருவரும் திரும்பினர்.

18-ம் படியில் தந்திரிகள் போராட்டம்

பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சரணகோஷமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலை கோவில் 18ம் படி முன்பு மேல்சாந்தி மற்றும் தந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: