பேமன்ட் நிறுவனங்களுக்கு கடிதம் ஆதார் அடிப்படையில் சேவை வழங்கக் கூடாது

புதுடெல்லி: ஆதார் அடிப்படையிலான சேவைகளை வழங்கக்கூடாது என, டிஜிட்டல் பேமன்ட் நிறுவனங்களுக்கு ஆதார் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பயோமெட்ரிக் அடிப்படையிலான சேவைக்கு மாற்று வழி காண வேண்டும் என ஆதார் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை அளிக்கும் பேமன்ட் நிறுவனங்களுக்கு ஆதார் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. உங்கள் நிறுவனம் இனி பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடாது. எனவே, உடனடியாக இத்தகைய சேவைகளை நிறுத்த வேண்டும். ஆதார் அடிப்படையில் பேமன்ட் பரிவர்த்தனைகளை வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: