பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு மெகுல்சோக்‌ஷியின் ரூ218 கோடி சொத்து பறிமுதல்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,400 கோடி கடன் மோசடி வழக்கில் ரூ218 சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,400 கோடி மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் உட்பட பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நீரவ் மோடிக்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நீரவ் மோடியின் உறவினர் மெகுல்சோக்‌ஷி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு சார்பில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள மெகுல் சோக்‌ஷியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி 3 முறை அமலாக்க துறை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இவற்றின் மெகுல்சோக்‌ஷி, அவரது நெருங்கிய உதவியாளர் மிகிர் பன்சாரி ஆகியோருக்கு சொந்தமான ரூ218 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது. மெகுல் சோக்‌ஷி ஆன்டிகுவா நாட்டில் தலைமறைவாக உள்ளார். ஆன்டிகுவா நாட்டில் முதலீடு செய்யும் போது கிடைக்கும் சலுகையின் மூலம் விசாவை பெற்று மெகுல் சோக்‌ஷி சென்றுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: