ஆஸ்திரேலியா 145 ரன்னில் ஆல் அவுட் பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை

அபு தாபி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வலுவான முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் பகார் ஸமான், கேப்டன் சர்பராஸ் அகமது தலா 94 ரன் விளாசினர். ஆஸி. பந்துவீச்சில் லயன் 4, லாபஸ்சேன் 3, ஸ்டார்க் 2, மிட்செல் மார்ஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுதிருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 50.4 ஓவரில் 145 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.

ஆரோன் பிஞ்ச் 39, லாபஸ்சேன் 25, மிட்செல் ஸ்டார்க் 34 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5, பிலால் ஆசிப் 3, யாசிர் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்துள்ளது. பகார் ஸமான் 66 ரன், முகமது ஹபீஸ் 6 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அசார் அலி 54, ஹரிஸ் சோகைல் 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, பாகிஸ்தான் அணி 281 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருப்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இன்று பரபரப்பான 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: