ரஷியாவில் உள்ள கல்லூரியில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி...50 பேர் காயம்

மாஸ்கோ: ரஷியா நாட்டின் கிரிமியாவில் உள்ள கல்லூரியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், கிரிமியாவில் கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இன்று நடந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: