அமெரிக்காவின் டெக்சாஸில் கனமழை...... தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மைக்கேல் புயல் புரட்டிப்போட்ட நிலையில் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை பெய்ததால் முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

குறிப்பாக கொலராடோ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அருகிலிருந்த வீடுகள், வாகனங்கள், மரங்கள் அடித்து செல்லப்பட்டன. தொடர்ந்து மழை நீடிப்பதால் பாதுகாப்பு கருதி முக்கிய அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: