காஸாவில் இஸ்ரேலிய விமானப்படைகள் அத்துமீறி தாக்குதல்...... இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில் பதற்றம்

காஸா: காஸா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டதால் இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள பீஷிபா நகரத்தின் மீது பாலஸ்தீன பகுதியில் இருந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மற்றோரு ராக்கெட் குண்டு பெல்அபீப் அருகே கடலில் விழுந்திருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதி அருகே இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத்துறை நாஸி அகமது அல் ஜெனின் தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீன எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: