திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியையொட்டி திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இங்கு ஒரு கிலோ மல்லிகைப் பூ 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூ சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

சென்றவாரம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட  மல்லிகைப்பூ நாளை ஆயுதபூஜை, நாளை மறுநாள் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி  இன்று 1,200 ரூபாய்க்கும், ரூ.250-க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.450-க்கும், சம்பங்கி பூ ரூ.400-க்கும் விற்பனையாகிறது. முல்லைப்பூ, ஜாதிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் பண்டிகையையையொட்டி கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: