இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதனை படைத்த இந்திய வீரர் சுராஜ் பன்வார்

புரூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.  அர்ஜென்டினாவின்  புரூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டி  நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஐந்தாயிரம் மீட்டர் நடை ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பாக 18 வயதான சுராஜ் பன்வார் கலந்து கொண்டார். இப்போட்டியின் மொத்த தூரத்தை  40 நிமிடங்கள் 59.17 வினாடியில் கடந்து 2-வது இடம் பிடித்த இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம், இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் பன்வார் நிகழ்த்தினார். இதேபோல், ஆடவர் மும்முறை தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களுடன் 12வது இடத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: