விளைாயட்டு துளிகள்

* வெஸ்ட் இண்டீசுடன் நடைபெற உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில், காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றுள்ளார்.

* ஐசிசி ஊழல் தடுப்புக் குழு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இலங்கை அணி முன்னாள் கேப்டன் ஜெயசூரியா தான் ஒருபோதும் விதிமுறைகளை மீறி நடந்ததில்லை என்று கூறியுள்ளார்.

* ஆஸ்திரேலிய தொடருக்கான தென் ஆப்ரிக்க அணியில் ஆல் ரவுண்டர் ஜீன் பால் டுமினி தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார்.

* மால்டாவை சேர்ந்த வாலெட்டா எப்சி அணிக்காக விளையாட ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* ஜெர்மனி டென்னிஸ் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் தனது பயிற்சியாளர் விம் பிஸ்ஸெட்டியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

* கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) விலகியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: