நடுவர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார்: வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா சஸ்பெண்ட்

புதுடெல்லி: இந்திய அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது நடுவர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா 2 ஒருநாள் போட்டிகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில், கியரன் பாவெல் ஆட்டமிழந்ததை தொடர்ந்து டிவி நடுவரின் அறைக்கு சென்ற வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீரர்கள் முன்னிலையில்யே 4வது நடுவரையும் தரக்குறைவாகப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, கள நடுவர்கள் புரூஸ் ஆக்சன்போர்டு, இனான் கவுல்டு, 3வது நடுவர் நிகெல் லாங், 4வது நடுவர் நிதின் மேனன் ஆகியோர் லா மீது புகார் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி, இந்திய அணியுடன் அக். 21 (கவுகாத்தி) மற்றும் 24ம் தேதி (விசாகப்பட்டிணம்) நடக்க உள்ள முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்ததுடன் அவருக்கு போட்டிக்கான ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்தது. மேலும், 3 தரக்குறைவு புள்ளிகளும் வழங்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: