மத்திய அரசு ரூ2.50 குறைத்த பிறகு டீசல் விலை 10 நாளில் ரூ2.69 அதிகரிப்பு

* பல நகரங்களில் லிட்டர் ரூ80ஐ தாண்டியது * கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கிடுகிடு

புதுடெல்லி: சென்னையில் டீசல் நேற்று 9 காசு அதிகரித்து ரூ79.80 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் டீசல் ரூ80ஐ தாண்டியது. மத்திய அரசு ரூ2.50 குறைத்து 10 நாட்களில் ரூ2.69 உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையில் நேற்று மாற்றமில்லை. எனினும், ரூ86ஐ நெருங்கி விட்டது.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வெகு வேகமாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட்டில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ8.07, டீசல் ரூ8.17 உயர்த்திய பிறகு மத்திய அரசு பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ2.50 குறைத்தது. இதில் எண்ணெய் நிறுவனங்கள் தலா ஒரு ரூபாய் ஏற்றன.

ஆனால், விலையை குறைத்த அடுத்த நாளில் இருந்தே மீண்டும் விலை உயர தொடங்கி விட்டது. கடந்த 4ம் தேதி மத்திய அரசு வரியை குறைத்த பிறகு, 5ம் ேததி சென்னையில் பெட்ரோல் ரூ2.63, டீசல் ரூ2.68 குறைந்தது. ஆனால், இதனால் ஏற்பட்ட இழப்பு அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்த்தப்பட்டு சரிகட்டப்பட்டு விட்டது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் ரூ1.29, டீசல் ரூ2.69 அதிகரித்துள்ளது. நேற்று பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் லிட்டர் ரூ85.99, டெல்லியில் ரூ75.46, மும்பையில் ரூ79.11க்கு விற்கப்பட்டது. டீசல் 9 காசு உயர்ந்து ரூ79.80 ஆக இருந்தது. டீசல் ஈரோட்டில் ரூ80.26, கோவையில் ரூ80.19, நாகர்கோவில் ரூ80.74,  ஐதராபாத்தில் ரூ82.08, அமராவதி ரூ81.07, அவுரங்காபாத் ரூ80.17 என நாட்டின் பல பகுதிகளிலும் டீசல் லிட்டர் ரூ80ஐ தாண்டி விட்டது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி உட்பட சரக்கு வாகனங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டன. காய்கறிகள் விலையும் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் இடையே விலை வித்தியாசம் முன்பு 10 ரூபாய்க்கு மேல் இருந்தது. தற்போது சிறிது சிறிதாக இந்த இடைவெளி குறைந்து தற்போது ரூ6.19ஆக உள்ளது. அந்த அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திய வண்ணம் உள்ளன. பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூ86.74ஆக இருந்தது. இது தற்போது 81 முதல் 82 டாலருக்குள்தான் உள்ளது இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்ைல. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: