பெட்ரோல், டீசல் உயர்வால் இன்னும் ஆறு மாதங்களில் சிமென்ட் விலை 10% உயரும்

புதுடெல்லி: சிமென்ட் உற்பத்தியாளர் சங்க தலைவர் சைலேந்திர சவுக்சே கூறுகையில், சிமெண்ட் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டள்ளது. கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல் விலை 60-70 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியையாவது சரி கட்ட வேண்டும்.  சிமெண்ட் விலை 6-7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. ஆனால், அடக்க விலை அதிகரித்துள்ளது. ஆனால், விற்பனை விலை உயரவில்லை.

டெல்லியில் 50 கிலோ கொண்ட சிமெண்ட் மூட்டை விலை ரூ300க்கு கீழ் விற்கப்பட்டு வருகிறது.  கடந்த 2011-12ம் ஆண்டு விலையில்தான் இப்போதும் சிமெண்ட் விற்கப்பட்டு வருகிறது. தேவையை விட உற்பத்தி அதிகமாக உள்ளதே இதற்கு காரணம். இந்த  துறையின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 50 கோடி டன் ஆக உள்ளது.  ஆனால், தேவை 30 கோடி டன்னாக உள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: