ரூபாய் மதிப்பை நிலை நிறுத்தும் வகையில் கச்சா எண்ணெய் விற்பனை முறையில் மாற்றம் செய்ய பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கச்சா எண்ெணய் விலை, அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. போதுமான உற்பத்தி இருந்தபோதிலும் எண்ணெய் துறையின் சந்தையில் நிலவும் தனிப்பட்ட தன்மைகள், விலையேற்றத்துக்கு வழிவகுக்கின்றன. மற்ற சந்தைகளில் நிலவுவது போலவே எண்ணெய் சந்தையிலும் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் கூட்டு முயற்சி அவசியம்.  கச்சா எண்ணெய் விலை உயர்வால் இதை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை போக்க எண்ணெய் வள நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

எரிவாயு விநியோக துறையில் தனியாரின் பங்களிப்பு தேவை என்றார். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது. கச்சா எண்ணெய்க்கு டாலரில் கட்டணத்தை கொடுப்பதால், ரூபாய் மதிப்பு சரியும்போது இறக்குமதி செலவு உயர்கிறது. இதுபற்றி குறிப்பிட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட நாட்டின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் வழங்கும் வகையில் கச்சா எண்ணெய் விற்பனை முறையில் மாற்றம் செய்ய  எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: