மதுரை மட்டன் சுக்கா

மட்டன் சுக்கா சும்மா மணமணக்கும்... மதுரை ருசி சேர்ந்தால் கேட்கவா வேணும்...!

செய்முறை

மட்டனை சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும்  வரை கிளறவும். இத்துடன் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5 - 6 விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த  பொருட்களை போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து பச்சை வாசனை  போகும் வரை நன்கு வதக்கவும். பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறவும்.  மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கவும்.மண் மணக்கும் சுவையில் மதுரை மட்டன் சுக்கா தயார்...!

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: