இனிப்பு சீயம்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு சீயம் செய்து பார்க்க ரெடியா... வாங்க அப்படியே கிச்சனுக்கு...

செய்முறை

பச்சரிசியையும், உளுந்தையும் ஊற வைத்து உருட்டும் அளவிற்கு கெட்டியாக ஆட்டி தேவையான அளவு உப்பு போட்டு அள்ளி வைத்துக் கொள்ளவும்.  பாசிப்பருப்பை துணியில் கட்டி, இட்லி சட்டியின் கீழ் போட்டு அவித்து வைத்து கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து தேங்காயை துருவி வதக்கி  வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தட்டி சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரைந்த பிறகு வடிகட்டி கொள்ளவும். பின்னர் வாணலியில் வதக்கிய தேங்காய், அவித்த பாசிப்பருப்பு, பொடித்த ஏலக்காய் சேர்த்து உருட்டும் அளவிற்கு கிண்டி எடுத்து கொள்ளவும். பூரணத்தை சிறு, சிறு  உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். ஆட்டிய மாவில் லேசாக தண்ணீர் ஊற்றி கரைத்து, உருண்டையை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து  எடுக்கவும். வாணலியில் நிறைய உருண்டைகளை போட வேண்டும். கொஞ்சமாக போடக்கூடாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: