கர்நாடகாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்து வந்து இன்ஜினியரை கழுத்தறுத்து கொன்ற மனைவி: கார் டிரைவராக கூடவே இருந்த கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதிச்செயல்

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே, கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோடு டம்டம் பாறை பகுதியில் கடந்த 18ம்  தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தேவதானப்பட்டி போலீசார், பிரேதப்பரிசோதனைககுப்பின்  சுடுகாட்டில் புதைத்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரூ போலீசாருடன்  சிலர் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். டம்டம்  பாறை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் முகமது சமீர் என்று கூறினர். தங்கள் முறைப்படி முகமது சமீர் உடலை  அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே கழுத்தை  அறுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் கூறியதாவது:கர்நாடகா மாநிலம், பாலக்காபாடி, காஞ்சிபட்டா ஜெஎம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சமீர் (32). இவர் அரபு நாட்டில் பொறியாளராக வேலை பார்த்து  வந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் மங்களூரூவைச் சேர்ந்த பிர்தோஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 மாத  பெண் குழந்தை உள்ளது.  செப். 13ம் தேதி குடும்பத்துடன் முகமது சமீர் வாடகைக் காரில் சுற்றுலா சென்றுள்ளார். பெங்களூரூவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி விட்டு அடுத்த நாள் காரில்   சேலம் வந்துள்ளனர்.

அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் போது, டம்டம் பாறை அருகே பட்டறைப்பாறை என்ற இடத்தில் முகமது சமீர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை மனைவி  பிர்தோஷ், கள்ளக்காதலன் டாக்சி டிரைவரான முகமது யாசி ஆகியோர் கழுத்தை அறுத்துக் கொன்று பிணத்தை வீசி விட்டுச் சென்றுள்ளனர். செப். 17ம் தேதி  குழந்தையுடன் வீட்டுக்குச் சென்ற மகளிடம் பிர்தோஷ் பெற்றோர், மருமகனை எங்கே என்று கேட்டுள்ளனர். அவர் சேலத்தில் இருந்து அவருடைய தோழியுடன்  சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். அத்துடன் வீட்டில் இருந்து 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.அவரைக் காணாததால் போலீசில் பிர்தோஷ் பெற்றோர் புகார் செய்தனர். டாக்சி  டிரைவர் முகமது யாசி மனைவியும் தனது கணவரை காணவில்லை என  போலீசில்  புகார் அளித்துள்ளார். இருவரது புகாரின் பேரில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் முகமது யாசி, பிர்ேதாஷ் செல்போன் உரையாடலை வைத்து  சோதனை செய்த போது அவர்கள் தமிழகத்தில் உள்ள தர்மபுரியில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறோம்.இவ்வாறு  தெரிவித்தனர்.கள்ளக்காதல் காரணமாக, முகமது சமீரை தீர்த்துக் கட்ட பிர்தோஷ், முகமது யாசி திட்டமிட்டுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராத படி கொலையை நடத்த  கள்ளக்காதல் ேஜாடி முடிவு செய்தது. இதன்படி, தங்களது சுற்றுலாத் திட்டத்துக்கு வாடகை காரை ஏற்பாடு செய்த பிர்தோஷ், கார் டிரைவராக கள்ளக்காதலன்  முகமது யாசியை வரவழைத்துள்ளார். மனைவியின் கள்ளக்காதலனே, கார் டிரைவராக உடன் வருவது தெரியாமல் முகமது சமீரும் அப்பாவியாக  மனைவியுடன் கொடைக்கானல் சென்றதும், வழியில் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: