33 அமைச்சர்களின் மீதுள்ள ஊழல் புகார்கள் விரைவில் வெளிவரும் : டிடிவி.தினகரன் பரபரப்பு பேட்டி

கும்பகோணம்: தமிழக முதல்வர் எடப்பாடி உட்பட 33 அமைச்சர்கள் மீது எண்ணற்ற ஊழல் புகார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றாக வெளிவரும் என்று கும்பகோணத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கூறினார். தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அமமுக துணை பொது செயலாளர்  டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி கனவு பலிக்காது என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். நான் அதிமுக பொருளாளராக இருந்தபோது மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் தம்பி உதயகுமார்.  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் முடியும் வரை எதையாவது உதயகுமார் பேசி கொண்டு தான் இருப்பார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் பல அமைச்சர்கள் இதுபோன்று வீரவசனங்கள் பேசி சூடு கண்டார்கள். அவர்களுக்கு திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் மக்கள் பதிலடியை கொடுப்பர். முதல்வர் உட்பட 33 அமைச்சர்கள் மீதும் எண்ணற்ற ஊழல் புகார்கள் உள்ளன. அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவரும்போது மக்கள் தெரிந்து கொள்வர்.

மின்வெட்டு குறித்து அமைச்சர் தங்கமணி எதை எதையோ சொல்லி கொண்டிருக்கிறார். நிலக்கரி, காற்றாலை மின்சார உற்பத்தியை தனியாரிடமிருந்து வாங்குவதில் பேரம் பேசப்பட்டு அதில் உடன்பாடு ஏற்படாததால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவருகின்றன. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள்  உள்ளன. அவரிடம் உள்ள சொத்துக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வந்தது அல்ல. அமைச்சர் துரைக்கண்ணு, உதயகுமார் போன்றோரின் பதவி இன்னும் சில காலங்களில் போய் விடும். அவர்கள் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். பதவியில் இருப்பவர்கள் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இப்பார்கள். அவர்கள் பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். அப்போது இவர்களது ஆட்டத்துக்கு முடிவு வந்துவிடும். இவ்வாறு டிடிவி. தினகரன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: