கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி மீட்பு

கொச்சி : பாய்மரப் படகுப்போட்டியில் பங்கேற்றபோது மாயமான இந்திய கடற்படை அதிகாரி அபிலாஷ் தோமி மீட்கப்பட்டுள்ளார். இந்தியக் கடற்படையைச் சேர்ந்த அபிலாஷ் தோமி பாய்மரப் படகில் உலகை வலம் வரும் போட்டியில் கலந்துகொண்டார். இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கடந்த 21ம் தேதி கடும் புயலால் அவரது படகு சேதமடைந்தது. இது குறித்து அவர் அனுப்பிய செய்தியில் புயலால் தாம் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இடத்தை விட்டு நகர முடியாமல் இருப்பதாகவும் தெரிவிருத்திருந்ததாக தகவல் வெளியானது.

பாதுகாப்பு கருவியின் மூலம் விமானிக்கு பதிலளித்த அவர், மோசமான வானிலை நிலவுவதாலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தார். கன்னியாகுமரிக்கு தெற்கே ஐயாயிரத்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அவர் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை மீட்க இந்தியக் கடற்படையின் கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் சென்றன. ஆனால் இந்தியக் கப்பல்கள் அங்கு சென்று சேர்வதற்கு முன்பே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓசிரிஸ் என்கிற மீன்பிடி கப்பல் அப்பகுதிக்குச் சென்று அபிலாஷ் தோமியை மீட்டது. அவர் நினைவுடன் உள்ளதாக முதற்கட்டத் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: