பாலியல் புகாரில் கைதான பிஷப் பிராங்கோவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி கைது செய்யப்பட்டுள்ள பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை பிஷப் பிராங்கோ பணியாற்றி வந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை வன்புணர்வு செய்ததாக பிஷப் பிராங்கோ மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பிஷப் பிராங்கோவிற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே புகார் அளித்து 70 நாட்கள் ஆகியும் பிஷப் பேராயர் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி 5 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து கடந்த வாரம் பிஷப் பிராங்கோ ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொச்சியில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமின் வழங்க கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: