இங்கிலாந்தில் நடைபெற்ற 82 அடி மரக்கம்பத்தில் ஏறும் சர்வதேச போட்டி கோலாகலம்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற மரம் ஏறும் சர்வதேச போட்டி கோலாகலமாக நடைபெற்றது இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஆல்சஸ்டர் நகரில் நடந்த இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். 82 அடி உயரத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த மரக்கம்பத்தில் குறைந்த நேரத்தில் ஏறி உச்சியைத் தொட வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் விதி ஆகும். மேலும் மரத்தில் ஏறும் போட்டியாளர்கள் பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டனர்.

போட்டி நேரம் தொடங்கியதும் 82 அடி உயர மரக்கம்பத்தில் அவர்கள் அதிவேகமாக ஏறத்தொடங்கினர். இறுதிச்சுற்றில் 25 வினாடிகளில் மரக்கம்பத்தின் உச்சியைத் தொட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த டான் வீலன் சாம்பியனாக தேர்வானார். இதே வீரர் கடந்த 2016 ஆம் ஆண்டும் வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: