மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிற்கு சொந்தமான 3 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடலூர் : லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிற்கு சொந்தமான 3 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் உள்ள தனியார் வங்கி லாக்கர்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வாகனத் தணிக்கை சான்று வழங்க ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கையும் களவுமாக பிடிபட்டார். அவரது பினாமி செந்தில் குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

இருவர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம், 144 சவரன் நகை மற்றும் 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாபுவிற்கு சொந்தமான 6 வங்கி லாக்கர்களின் சாவிகளும் சோதனையில் சிக்கின. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபுவின் 3 வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் எஞ்சிய 3 லாக்கர்களிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. பாபுவிற்கு சொந்தமான லாக்கர்களில் இதுவரை நடைபெற்ற சோதனையில் 2000 சவரன் நகைகள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: