கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: 'யெல்லோ அலர்ட்'விடுத்தது இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக கேரள முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. 25, 26-ம் தேதி ஆகிய நாட்களில் 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்யும், மேலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையையடுத்து மாநில பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: