மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயரவுள்ளதாக தகவல்

சென்னை: சென்னை மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 3,200 மாநகர பஸ்கள் இயங்கி வருகிறது. பஸ்களில் நாள்தோறும் 40 முதல் 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கடும் எதிர்ப்புக்கு இடையே பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது.  

பஸ் கட்டண உயர்வுக்கு முன் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.85 கோடி வருவாய் கிடைத்தது. பஸ் கட்டணம் உயர்த்திய பின்பு எதிர்பார்த்ததை விட வருவாய் ரூ.2.3 கோடியாக குறைந்தது. கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் மின்சார ரெயில், இரு சக்கர வாகனம் போன்ற மாற்று பயணங்களுக்கு மாறியதால் இந்த இழப்பு ஏற்பட்டது.

தற்போது மாதந்தோறும் 1,20,000 பேர் மாதாந்திர பஸ் பாஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த பாஸ்களில் குளிர்சாதன பஸ்கள் தவிர மற்ற பஸ்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகர பஸ்களில் தினசரி பாஸ் ரூ.50-க்கு வழங்கப்படுகிறது. இதனை விட மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000 வழங்குவதால் தான் மாநகர போக்கு வரத்து கழகக்துக்கு அதிக இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகர பஸ்களில் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: