பான் பசிபிக் ஓபன் : பைனலில் ஒசாகா - பிளிஸ்கோவா

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - கரோலினா பிளிஸ்கோவா மோதுகின்றனர்.

அரை இறுதியில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜார்ஜியுடன் மோதிய ஒசாகா (ஜப்பான்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு அரை இறுதியில் டோனா வேகிச்சுடன் (குரோஷியா)மோதிய கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த டோனா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்த பிளிஸ்கோவா 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 2 மணி, 4 நிமிடத்துக்கு நீடித்தது. பைனலில் ஒசாகா - பிளிஸ்கோவா மோதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: