பிராக்கோலி விலை குறைந்தது நீலகிரி விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பிராகோலி விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி  மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில  பகுதிகளில்  விவசாயிகள் சைனீஷ் வகை காய்கறி பயிரிட்டு வருகின்றனர்.  மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிைடக்காத போதிலும், ைசனீஷ் வகை  காய்கறிகளுக்கு எப்போதும் சற்று விலை அதிகமாக கிடைத்து வருவதால், இதனை  ஆர்வமுடன் பயிர்செய்கின்றனர்.  எப்பநாடு, அணிக்கொைர, சின்னக்குன்னர், தும்மனட்டி,  மோரிக்கல், கல்லட்டி, கெந்தோரை, கடநாடு மற்றும் இதனை சுற்றியுள்ள  கிராமங்களில் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளான சுக்கினி, செல்லாரி,  பிராக்கோலி, சைனீஷ் கேபேஜ் உட்பட பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு  வருகின்றனர்.

எப்போதும் சீரான விலை இந்த காய்கறிகளுக்கு கிடைத்து வந்த  நிலையில், கடந்த ஒரு வார காலமாக பிராக்கோலி விலை மட்டும் சரிந்துள்ளது.  சாதாரண நாட்களில் ஒரு கிலோ ரூ.50 வரை  விற்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக பிராக்கோலி கிலோ ரூ.20 முதல் 30 வரை  மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விைல குறைந்த  நிலையில் இதனை ஏலம் எடுக்கவும் வியாபாரிகள் தயக்கம் காட்டுவதால் இவைகளை  பறித்து விற்பனை ெசய்ய முடியாத நிலை ஏற்படுள்ளதாகவும், இதனால்,  விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து  கோடப்பமந்து பகுதி விவசாயி பிரகாஷ் கூறுகையில், பொதுவாக சைனீஷ் வகை  காய்கறிகளுக்கு ஒரே சீரான விலை கிடைத்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக  பிராக்கோலிக்கு மட்டும் விலை குறைந்துள்ளது. இதனால், தோட்டங்களில்  இருந்து இவைகளை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வர விவசாயிகள் தயக்கம்  காட்டுகின்றனர். குறித்த பருவத்தில் பறித்து விற்பனை செய்யவில்லை என்றாலும்  நஷ்டம் ஏற்பட்டு விடும். எனவே, அடிமாட்டு விலைக்கு தற்போது இதனை விற்பனை  செய்கிறோம். கிலோ ரூ.30 வரையே விற்பனையாகிறது. இதனால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: