மரக்காணத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

மரக்காணம்: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளூக்கு சொந்தமான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களூக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.     இந்த தொழிலை நம்பி இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து அக்டோபார் மாதம் வரையில் நடைபெறும். கோடை வெயிலில்தான் உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும். இப்பகுதியில் ஜனவரி மாதத்தில் இருந்து கோடை மழை பெய்யவில்லை.

மேலும் வழக்கத்திற்கு மாறாக இப்பகுதியில் கோடை முடிந்தும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. இதனால் உப்பு உற்பத்தியும் அமோகமாக இருந்தது. இங்கு உப்பு உற்பத்தி அதிகமானதால் உப்பின் விலையும் வீழ்ச்சியடைந்தது. இதனால் அதிகமாக உப்பு உற்பத்தி செய்தும் நஷ்டம் அடையும் நிலைக்கு உப்பு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த 3 நாளாக  பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: