புரட்டாசி விரதம் தொடங்கியதால் மீன் விற்பனை 80 சதவீதம் சரிவு: வியாபாரிகள் புலம்பல்

சேலம்: புரட்டாசி விரதம் தொடங்கியதால் மீன் கடைகள், வறுவல் மீன்கடைகளில் 80 சதவீத வியாபாரம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் புலம்புகின்றனர். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் மேற்கொள்வதை வாடிக்கையாக ெகாண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி புரட்டாசி தொடங்கியது. இதையொட்டி அதற்கு முந்தைய நாளான 16ம் தேதி அனைத்து கடைகளிலும் இறைச்சி, மீன் வியாபாரம் களைக்கட்டியது. அன்று வழக்கத்தைவிட 50 சதவீதம் விற்பனை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் புரட்டாசி விரதம் தொடங்கியதையடுத்து அனைத்து மீன் கடைகளியிலும் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து சேலம் வ.உ.சி., மீன் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது;

சேலம் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வஞ்சிரம், ஊழி, சங்கரா, விளாமீன், நகரா, முரல், அய்லா, மத்தி, நெத்திலி உள்ளிட்ட மீன்களும், இதைதவிர மேட்டூர், கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கட்லா, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து மீன்களின் விற்பனை சரிந்துள்ளது. வழக்கமாக சேலம் நகரத்தில் உள்ள கடைகளில் ஒரு டன் அளவுக்கு மீன் வியாபாரம் இருக்கும்.

ஆனால் தற்போது 80 சதவீதம் வியாபாரம் சரிந்துள்ளது. இதேபோல் மீன் வறுவல் கடைகளிலும் விற்பனை குறைந்துள்ளது. கடந்த 16ம் தேதி 600க்கு விற்ற வஞ்சிரம் கிலோ 450க்கு விலை சரிந்துள்ளது. 325க்கு விற்ற ஊழி 250 எனவும், 300க்கு விற்ற சங்கரா 200 எனவும், 325க்கு விற்ற விளாமீன் 250 எனவும், 250க்கு விற்ற நகரா 200 எனவும்,. 200க்கு விற்ற அய்லா 120 எனவும், 150க்கு விற்ற மத்தி 100 எனவும், 250க்கு விற்ற நெத்திலி 200 என விலை சரிந்துள்ளது. இவ்வாறு மீன் வியாபாரிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: