புதுசு மாதிரியே இருக்குமாம் : செலவு வைக்காத பழைய கார் எங்கே கிடைக்கும் தெரியுமா?

புதுடெல்லி: மிக மலிவான, செலவு வைக்காத பழைய கார் எங்கே வாங்குவது என்பது தொடர்பாக சர்வே வெளியாகியுள்ளது.பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பலர் வாங்கிய காரை கூட வீட்டில் வைத்து விட்டு பஸ்சில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். சிலர் சொகுசு பயணத்தை விட முடியாமல் காரில் செல்வதையே விரும்புகின்றனர். அதிலும், நடுத்தர குடும்பத்தினர் பலர், என்றைக்காவது நீண்ட பயணம், பார்க், பீச் என குடும்பத்துடன் செல்ல ஆட்டோ, டாக்சிக்கு அழ வேண்டாமே எனக்கருதி பழைய கார்களை வாங்குகின்றனர்.

 பழைய காரை மலிவாக கூட வாங்கி விடலாம், பராமரிப்பது மிகவும் கடினம். அவ்வப்போது செலவு வைத்துக்கொண்ேட இருக்கும். இதில் பெட்ரோல், டீசல் விலை எகிறிக்கொண்டிருந்தால் காட்சிப்பொருளாகத்தான் வைக்க வேண்டியிருக்கும். இவ்வளவு களேபரத்துக்கு இடையிலும் கார் வாங்க ஆசைப்படுபவர்களுக்காகவே ஒரு சர்வே வெளியாகியுள்ளது.

 பழைய கார்களை சண்டிகாரில் வாங்குவது சிறந்தது. அங்கு கார்களை மிக சிறப்பாக பராமரிக்கின்றனர். அதோடு, குண்டு, குழி சாலைகள் இல்லை. பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் ஓடுகின்றன. இதனால் இவை கிட்டத்தட்ட புதிது போலவே பக்காவாக இருக்கும் என்று பழைய கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது. டெல்லியில் பழைய கார்களை மிக மலிவாக வாங்கலாம். இங்கு விற்பனையாகும் பழைய கார் விலை பெங்களூருவில் 7 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. மும்பை மற்றும் பெங்களூருவில் புதிதாக வாங்கிய கார்கள் 3 வருட பயன்பாட்டுக்கு பிறகு விற்பனைக்கு வந்து விடுகிறது. மும்பை, சென்னையில் கார்கள் கடல் உப்புக்காற்றால் சற்று பாழாகி விடுகின்றன.  சராசரியாக ஒவ்வொரு காரும் டெல்லியில் 3,000 கி.மீ, மும்பையில் 2,000 கி.மீ கார்கள் ஓட்டப்படுகின்றன. சென்னையில் டெல்லியை விட 30 சதவீதம் அதிகமாகவும், பெங்களூருவில் 23 சதவீதம் அதிகமாகவும் கார்கள் ஓடுகின்றன. டெல்லியில் உள்ள கார்கள் மலிவாக இருந்தாலும் சேதம் அடைந்த கார்களே அதிகம் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: