10 வங்கிகளுக்கு எம்டி, சிஇஓ நியமனம் : மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய மயமாக்கப்பட்ட 10 வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர் (எம்டி) மற்றும் முதன்மை செயல் அதிகாரிகளை (சிஇஓ) நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மிருத்யுஞ்ஜய் மகாபத்ரா - சிண்டிகேட் வங்கி, பத்மஜா சந்துரு  - இந்தியன் வங்கி, பல்லவ் மொகாபத்ரா - சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பக்கிரிசாமி - ஆந்திரா வங்கி, கர்ணம் சேகர் - தேனா வங்கி எம்டி, சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாரத ஸ்டேட் வங்கியில் துணை நிர்வாக இயக்குநர்களாக இருந்தவர்கள். இதுபோல், சிண்டிகேட் வங்கி செயல் இயக்குநராக இருந்த மல்லிகார்ஜூன ராவ்,  அலகாபாத் வங்கிக்கும், இந்தியன் வங்கி செயல் இயக்குநர் ராஜீவ் பாங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கும் எம்டி, சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.அதுல் குமார் கோயல் யூகோ வங்கிக்கும், ஹரிஷ்னாகர் பஞ்சாப் சிந்த் வங்கிக்கும், அசோக் குமார் பிரதான் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் எம்டி சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் தலைமையிலான நியமன குழு இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: