ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு விவகாரம்: மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: செப்டம்பர் 22 முதல் 24 வரை ஸ்டெர்லைட்டில் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு செய்ய உள்ளதாக வந்த தகவலையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை  ஒத்திவைக்குமாறு தமிழக அரசு, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணையில்  உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆய்வு  திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்  எழுதியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு திட்டத்தை ரத்துசெய்யுமாறு தமிழக அரசு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை நீதிபதி தருண் அகர்வால் குழு வரும் 22- தேதி தொடங்க இருந்தது.  அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான தருண் அகர்வால் தலைமையில் செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர்  ஏ.கே.கோயல் கூறினார். தற்போது ஆய்வுக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு திட்டத்தை ரத்துசெய்யுமாறு மத்திய மாசுக் கட்டுப்பாடு  வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: