ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை : நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில்பாஜக கட்சி பல உண்மைகளை மறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே ரஃபேல் விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதுகுறித்து அனைத்து பேச்சுவார்த்தைகளும்  நிறைவடைந்த நிலையில், ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில் வெற்றிகரமாகக் கையெழுத்தாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் நிர்ணயித்த விதியின்படியே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட குறைவான விலையிலேயே விமானம் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் போட்ட ஒப்பந்தத்தில் ரஃபேல் தயாரிப்பில் இருந்து எச்ஏஎல்லை கைவிட்ட நிலையில், பாஜக அதனையும் சேர்த்து ஒப்பந்தம் போட்டுள்ளது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கூட்டணி அரசை விட பாஜக அரசு 9 சதவிகிதம் குறைவான விலையில் விமானம் வாங்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். விமானப்படையில் ஒரு ஸ்குவாட்ரனுக்கு 42 விமானங்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், கடந்த 2013ம் ஆண்டிலேயே விமான படையில் ஒரு ஸ்குவாட்டரானுக்கு 33ஆக விமான எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதையடுத்து இந்திய விமான படைக்கு உடனடியாக விமானம் வாங்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டதால்தான் ரஃபேல் ஒப்பந்தம் அவசரமாக நடந்தது என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: