தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? செப்டம்பர் 22-ல் முதல் ஆய்வுக்குழு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை நீதிபதி தருண் அகர்வால் குழு வரும் 22- தேதி தொடங்குகின்றது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான தருண் அகர்வால் உடல்நலக்குறைவு காரணமாக ஆய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் 22-ம் தேதி அவர் தலைமையில் முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் கூறியுள்ளார். விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் குழுவை நாடும்படி அறிவுறுத்தினார். இதேபோல் தங்கள் தரப்பிலும் எழுத்து பூர்வமான கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். இதனால் ஆவேசமடைந்த தமிழக அரசு வழக்கறிஞர் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனாலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. நீதிபதி தருண் அகர்வால் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் போராட்ட குழு சார்பாக தொடரப்பட்ட மனுக்களையும் பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: