தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பது மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நீலகிரி, ஆலங்குடி, மாதவரம், புதுக்கோட்டையில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்பதால் செப்டம்பர் 20-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: