தூத்துக்குடியில் கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கடலில் முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லாமொழி மீனவகிராமத்தைச் சேர்ந்த 1030 பேர் மீது கூடங்குளம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு கடலில் நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 26 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 200 படகுகளில் வந்து கடலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லாமொழி என்ற இடத்தில் 680 மெகாவாட் திறனுடைய 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டுவருவதற்காக கல்லாமொழி அருகே கடலுக்குள் 15 கிலோ மீட்டர் தொலைவில் பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றிய படி நடுக்கடலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல் முற்றுகை போராட்டத்தில் 400 படகுகளில் 26 மீனவ கிராமங்களை சேர்ந்த 1000 மீனவர்கள் பங்கேற்றனர். கடலில் நிலக்கரி இறக்குதளம் அமைக்கப்பட்டால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு மீன்கள் அழியும் நிலை ஏற்படும் என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீனவர்களின் போராட்டத்தை அடுத்து பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த நிலையில்  நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: