தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் தங்கமணி பேட்டி

டெல்லி : தமிழக மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று  டெல்லியில் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் அமைச்சர் தங்கமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ஒதுக்கியதுபோல் 20 ரயில் வேகன்களில் நிலக்கரியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் ஒடிசாவில் கனமழை பெய்ததால், தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் எப்போதும் 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருக்கும். தற்போது கையிருப்பு குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் நிச்சயம் மின்வெட்டு ஏற்படாது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மின்சாரத்தின் தேவை குறைந்துளளது. அதனால்தான் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. 15 நாட்களுக்கு மேல் நிலக்கரியை இருப்பு வைத்தால் அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்தைத் தவிர்க்கவே கூடுதல் நிலக்கரியை இருப்பில் வைப்பதில்லை. மேலும் காற்றாலை மின்சாரத் தயாரிப்பில் திடீர் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுழற்சி முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: