விளம்பர நிறுவனத்திடம் ரூ. 1.75 கோடி கேரளா ஃபேஷன் ஜுவல்லரி நிறுவனம் மோசடி

சென்னை: விளம்பர நிறுவனத்திடம் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கேரளா ஃபேஷன் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான சுனில் செரியன் மீது வழக்குப் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூர் புரசைவாக்கம், வளசரவாக்கம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மூலம் தொலைக்காட்சிகள் மற்றும் இதழ்களில் தொடர்ந்து விளம்பரங்களை கொடுத்து வந்தது.

குறிப்பிட்ட விளம்பரம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான 50 நாட்களிலோ, அல்லது இதழ்களில் பிரசுரமான 50 நாட்களிலோ அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்நிலையில் கேரளா ஃபேஷன் ஜுவல்லரி, தனியார் விளம்பர நிறுவனத்துக்கு 1 கோடியே 75 லட்சம் ரூபாய் தரவேண்டியிருந்த நிலையில் அதனை தராமல் இழுத்தடித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் பணத்தை தரமுடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவின் ஆவண மோசடி தடுப்புப் பிரிவினர் கேரளா ஃபேஷன் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான சுனில் செரியனை சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.      

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: