இங்கிலாந்து ஓட்டலில் பெரும் பரபரப்பு : சுற்றுலா பயணிகள் மீது நச்சுப் பொருள் தாக்குதல்

லண்டன் : இங்கிலாந்தின் வில்ட்ஷயர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சாலிஸ்பரி சுற்றுலா தளத்தில் வழக்கம் போல ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு உள்ள ஒரு Prezzo என்ற உணவகம் ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ரஷியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் , 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனைப் பார்த்த ஊழியர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே அவர்கள் மயக்கம் அடைந்த உணவு விடுதியில் போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு நோவிசாக் எனப்படும் நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. பொதுவாக இந்த நச்சுப் பொருளை ரஷியா உணவுப் படையினரும் ராணுவத்தினரும் மட்டுமே பயன்படுத்துவர் எனக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இதே நகரில் ரஷியாவின் முன்னாள் உளவாளியான Sergei Skripal தனது மகள் யூலியாவுடன் நச்சுப் பொருள் தாக்குதலுக்கு ஆளாகி காப்பாற்றப்பட்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: