நவாஸ் மனைவி உடல் பாகிஸ்தானில் அடக்கம்

லாகூர்: புற்றுநோய் பாதிப்பு காரணமாக  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்மனைவி பேகம் குல்சூம், கடந்த செவ்வாய்க்கிழமை இறந்தார். அவருக்கு வயது 68.  அவரது உடல் லண்டனில் இருந்து லாகூருக்கு நேற்று விமானத்தில் எடுத்து வரப்பட்டது. அவரது உடலுடன் மகள் அஸ்மா, பேரன் சயித் உசேன் ஷெரீப் மற்றும் 11 உறவினர்கள் உடன் வந்தனர். ஊழல் வழக்கில் தலைமறைவாக உள்ள நவாசின் மகன்கள் ஹாசன், உசேன் நவாஸ் ஆகியோர் தனது தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை குல்சூம் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப், மரியம்,  சப்தாருக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இவர்கள் 3 பேரும் குல்சூமின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: