இந்திய அமெரிக்கரான பிமால் படேலுக்கு டிரம்ப் முக்கிய பதவி

வாஷிங்டன்:அமெரிக்காவின் ஜியார்ஜியாவை சேர்ந்த இந்திய வம்சவாளி அமெரிக்கரான பிமால் படேல், அமெரிக்காவின் நிதித்துறை நிலைத்தன்மை மேற்பார்வை கவுன்சிலில் துணை உதவி அமைச்சராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இவரை முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை உதவி அமைச்சர் பதவியில் நியமிக்க அதிபர் டிரம்ப் தற்போது முடிவு செய்துள்ளார்.  படேல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்க அமைச்சரவையின் நிதித்துறையில் இணைவதற்கு முன்பாக, படேல், வாஷிங்டனில் உள்ள நிதித்துறை ஆலோசனை மற்றும் ஒழுங்குமுறை மையத்தின் பங்குதாரர் மற்றும் தலைவராக இருந்துள்ளார். முன்னதாக குடியரசு பாதுகாப்பு காப்பீட்டு கழகத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.  ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தின் இணை பேராசிரியராகவும் இவர் பணி புரிந்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: