‘இந்தா... ஆரம்பிச்சுட்டாருல்ல...’ பாகிஸ்தான் பாதுகாப்பில் ஐஎஸ்ஐ முன்னணி வகிக்கிறது: பிரதமர் இம்ரான்கான் புகழாரம்

இஸ்லாமபாத்: ‘‘பாகிஸ்தான் பாதுகாப்பில் உளவுத்துறை ஐஎஸ்ஐ முன்னணி வகிக்கிறது’’ என பிரதமர் இம்ரான்கான் புகழ்ந்துள்ளார்.  பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றபின் ராணுவ தலைமையகத்துக்கு ஏற்கனவே 2 முறை இம்ரான்கான் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தலைமையத்துக்கு நேற்று தனது அமைச்சர்கள் சிலருடன் சென்றார். அவரை ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா, ஐஎஸ்ஐ இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தர் ஆகியோர் வரவேற்றனர். இதுகுறித்து ராணுவ தகவல் தொடர்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாட்டின் பாதுகாப்பிலும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கையிலும் உளவுத்துறையின் பங்கை பிரதமர் இம்ரான்கான் பாராட்டினார். நாட்டின் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும் ஐஎஸ்ஐ, உலகின் மிகச் சிறந்த அமைப்பாக செயல்படுகிறது எனவும் அவர் கூறினார்’’ என்று கூறப்பட்டுள்ளது.  இம்ரான்கானை ஆட்சியில் அமர்த்தியதே ராணுவமும், உளவுத்துறையும்தான் என பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: