ஆழ்வார்பேட்டை ஸ்ரீ சங்கரா ஹாலில் விநாயகர் சிலைகள் விற்பனை கண்காட்சி

சன்மதி கிரியேசன்ஸ் சார்பில் ஆழ்வார்பேட்டை ஸ்ரீ சங்கரா ஹாலில் வினாயகர் விஜயம் என்ற பெயரில் நடைபெறும் 11 நாள் கண்காட்சி நேற்று தொடங்கி 16ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் துவக்கி வைத்தார். பின்னர், அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை பார்வையிட்டார். சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டினார்.

சன்மதி கிரியேசன்ஸ் சார்பில் வினாயகர் விஜயம் கண்காட்சி விற்பனை ஏற்பாடு செய்துள்ள சோமசுந்தரம், மாலினி ஆகியோர் கண்காட்சி குறித்து கூறியதாவது:- விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு, இந்த கண்காட்சியில் பவளம், முத்து, மரகதம், மாணிக்கம், கோமேதகம், போன்ற பல்வேறு சிறந்த கற்களாலும் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வெண்கலம் மரத்தால் ஆன சிலைகள் வெட்டிவேர் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகள் ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட வினாயகர் சிலைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் வெண்கலம், மரத்தாலான சிலைகள், வெட்டி வேர் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகள் ருத்ராட்சங்களால் போன்றவையுடன் சுட்ட களிமண் எனப்படும் டெரகோட்டா விநாயகர் உருவங்கள் மாவுகள் சிற்பங்கள் மாமல்லபுரம் கல் சிற்பங்கள் கல் சிற்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: